செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா படம் சும்மா தீயா இருக்கும் | தமிழ் சினிமா பெஸ்ட் ஒன்லைன் கதைகள்!

படம் சும்மா தீயா இருக்கும் | தமிழ் சினிமா பெஸ்ட் ஒன்லைன் கதைகள்!

5 minutes read

தமிழ் சினிமா இயக்குநர்கள் “எப்படி இந்த ஒன் லைனை படமாக்குனாங்க”னு நம்மளை ஆச்சரியப்பட வைச்ச சிம்பிள் கதைகளைத்தான் பார்க்கப்போறோம்.

மலையாளத்துல மட்டுமில்ல தமிழ்லயும் நிறைய இன்ட்ரஸ்டிங்கான ஒன்லைனை எடுத்து படமா நமக்கு கொடுத்துருக்காங்க. விசா வாங்க பொய் சொல்றது, பீட்ஸா திங்க ஆசைப்படுறது, கிரிக்கெட் விளையாடி அடிபடுறது, கைதி மகளை பார்க்கப்போறதுனு நம்ம டைரக்டர்ஸும் மாஸா பல சம்பவங்களை பண்ணிருக்காங்க. இந்த வீடியோல, தமிழ் சினிமா இயக்குநர்கள் “எப்படி இந்த லைனை படமாக்குனீங்க”னு நம்மளை ஆச்சரியப்பட வைச்ச சிம்பிள் கதைகளைத்தான் பார்க்கப்போறோம்.

காக்கா முட்டை
காக்கா முட்டை

காக்கா முட்டை – “ஒரு ஏரியா பீட்ஸா கடை திறக்குறாங்க. அந்தப் பகுதில ஸ்லம்ல இருக்குற பசங்களுக்கு பீட்ஸா சாப்பிட ஆசை வரும். அதுக்காக என்னலாம் நடக்குது” – இதுதான் கதை. அதுக்குள்ள பொதுவான மனநிலையை கேள்வி கேக்குற காட்சிகளையும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும் அவ்வளவு அழகா காட்டியிருப்பாங்க. காக்கா முட்டையா நடிச்ச பசங்க, ஐஸ்வர்யா ராஜேச்ஜ், ரமேஷ் திலக், யோகி பாபு எல்லாருமே அட்டகாசமா நடிச்சிருப்பாங்க. ஒன்லைனா சிம்பிளா இருக்கு. ஆனால், படமா நிறைய கேள்விகளை சமூகத்தை நோக்கி வீடியிருக்கும்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – செம ஜாலியான படம். “கல்யாணத்துக்கு முன்னாடி கிரிக்கெட் விளையாட போவாங்க. அங்க தலைல அடிபட்டு தற்கால மறதி வரும். அதுனால என்ன நடக்குது” – இவ்வளவுதான். டயலாக்ஸ்கூட நிறைய இருக்காது. என்னாச்சு, ப்பா, சிவாஜி செத்துட்டாரா?, நாகராஜ் அண்ணே! – இப்படி சிம்பிளா டயலாக் எழுதி மாஸ் பண்ணியிருப்பாங்க. ஒரு மனுஷனுக்கு இப்படிலாமா நடக்கும்னு தோண வைச்சாலும் சிரிச்சிட்டே இருக்கலாம்.

ஆண்டவன் கட்டளை
ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை – ஒரு பேரால இவ்வளவு கஷ்டம் வருமா?னு யோசிக்க வைச்சப் படம். “விசா அப்ளை பண்ண கற்பனையா ஒரு பேரை வைச்சு அதனால என்ன பாடு படுறாங்?”ன்றதுதான் கதை. இதுக்கிடைல வீடு கிடைக்கிறதுல இருக்குற பிரச்னை, நாடகம், ஃபாரீன் போறவங்களுக்கு இருக்குற சிக்கல், காதல் எல்லாத்தையும் சொல்லியிருப்பாங்க. சமூகத்தின் மீதான விமர்சனம்தான் இந்தப் படம்னு சொல்லலாம். இந்த மாதிரி நிறைய படங்கள் வரணும்னு அடிக்கடி தோணும்.

கைதி
கைதி

கைதி – செம மாஸால! “ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுற அப்பா, மகளை பார்க்க போவாரு” – என்னது அவ்வளவு தானா?னு தோணும். அவ்வளவுதான? இதுக்குள்ள அந்த டிராவல்ல நடக்குற விஷயங்கள் எல்லாம் மாஸா இருக்கும். குறிப்பா அந்த படத்தோட ட்ரீட்மெண்டே தரமான செய்கையா இருக்கும். பிரியாணி சீன், லாரி ஃபைட் சீன், போலீஸ் ஸ்டேஷன் சீன், கம்மல் கொடுக்குற சீன்னு எல்லாத்தையும் கச்சிதமா பண்ணிருப்பாங்க. எமோஷன் கலந்த சிம்பிளான மாஸ் படம்னா இப்படி இருக்கணும்.

மண்டேலா
மண்டேலா

மண்டேலா – சமீபத்துல தேசிய விருதுகள் எல்லாம் வாங்கிக்குவிச்ச படம். “ஒரு ஊர்ல லோக்கல் எலெக்‌ஷன் நடக்கும். அந்த ஊர்ல எந்த அடையாளமும் இல்லாமல் வாழுற ஒருத்தனுக்கு வோட்டர் ஐ.டி கிடைக்குது. அந்த ஒரு ஓட்டுக்காக என்னலாம் பண்றாங்க?” – இதான் கதை. எமோஷனலான பொலிட்டிக்கல் படம்தான் இது. தியேட்டர்ல இந்தப் படத்தை ரொம்பவே மிஸ் பண்ணோம்னு நிறைய பேர் போஸ்ட் பண்ணியிருந்தாங்க. இப்போ இந்த டைரக்டர்தான் சிவகார்த்திகேயனை வைச்சு மாவீரன் எடுக்குறாரு. அதுவும் இந்தப் படம் மாதிரி நுணுக்கமான அரசியல் பேசுற படமா இருக்கும்னு நம்புவோம்.

நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது – தியேட்டர்ல ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியா நல்ல வரவேற்பைப் பெற்ற படம். “காதல் சம்பந்தமா ஒரு நாடகம் போடுறாங்க. அதுக்கான டிஸ்கஷன், பயிற்சி” – இதுதான் கதை. இதுக்கிடையில் காதல், ஆணவக்கொலை, சாதியப் பிரச்னைகள், உடலரசியல், உடையரசியல், பெண்ணியம், தன்பாலின ஈர்ப்பு காதல்னு பல விஷயங்களை பேசியிருப்பாங்க. சமூபத்துல வந்த முக்கியமான படங்கள்ல நட்சத்திரம் நகர்கிறதும் ஒண்ணு.

ஜெய் பீம்
ஜெய் பீம்

ஜெய் பீம் – உலக அளவுல தமிழ் சினிமாவை கவனிக்க வைச்சப் படம், ஜெய் பீம். “கணவர் காணாமல் போய்டுவாரு. அதுக்காக மனைவி ஒரு வழக்கு போடுவாங்க. கணவரை தேடுவாங்க. கடைசில என்ன ஆச்சு?” – இதுதான் கதை. இதுக்குள்ள பழங்குடி மக்கள் படுற கஷ்டங்கள், சட்டம் எப்படிலாம் செயல்படுது, அதிகாரம் எப்படிலாம் செயல்படுது, சாதிகள் எப்படிலாம் செயல்படுதுனு பேசி டிஸ்கஷனை கிரியேட் பண்ணியிருப்பாங்க. செம வொர்த்தான படம்.

அறம்
அறம்

அறம் – “போர்வெல் போட்ட குழில குழந்தை விழுந்துரும். அந்த குழந்தையை காப்பாத்துவாங்களா? மாட்டாங்களா?” – இதுதான் கதை. கடந்த பல வருஷங்களா ரொம்ப சீரியஸான பிரச்னையா இருக்குறது இதுதான். இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தும் குழந்தையை காப்பாத்துறதுக்கு திணறுரது, தண்ணீர் பிரச்னை, வெளிநாட்டு கம்பெனிகள் பண்ற விஷயங்கள்னு ஏகப்பட்ட பிரச்னைகளை இந்த ஒன்லைன் வழியா பேசியிருப்பாங்க. நயன்தாரா நடிச்சு தூள் கிளப்பியிருப்பாங்க.

தமிழ் சினிமாலயும் இந்த மாதிரி எக்கச்சக்கமா சிம்பிளான ஒன்லைன வைச்சு நிறைய படங்கள் இயக்கியிருக்காங்க. இந்த லிஸ்ட்ல நான் குறிப்பிட்ட சொல்லாத, சிம்பிளான ஒன்லைன் உள்ள படங்களை கமெண்ட் பண்ணுங்க!

நன்றி : tamilnadunow.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More