கனடாவின் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள Rideau Canal Skateway எனும் பனிச்சறுக்குத் தளம் 50 ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UNESCO மரபுடையமைத் தளமான அது, உலகின் மிகப் பெரிய வெளிப்புறப் பனிச்சறுக்குத் தளமாக விளங்குகிறது.
எனினும், வெப்பநிலை அதிகரிப்பால் அந்தத் தளம் குளிர்காலத்தில் மூடப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா வரலாற்றில் கடும் வெப்பமான குளிர்காலம் இது. இந்நிலையில், போதிய பனி இல்லாததால் பனிச்சறுக்குத் தளம் மூடியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரித்த வெப்பத்தால் பனி உருகும்; உருகிய பனிப்பரப்பில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது.
அப்போது பனிச்சறுக்குச் சாதனங்களின் எடையையும் பனிச்சறுக்கில் ஈடுபடுவோரின் எடையையும் தாங்கும் சக்தி பனிச்சறுக்குத் தளத்துக்கு இருக்காது.
தளத்தின் வெப்பநிலை தொடர்ந்து 2 வாரங்களுக்கு பூஜ்ஜியத்துக்குக் கீழ் 10 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் மட்டுமே மக்களால் அதில் பாதுகாப்பாக விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.