ஓஷோ சொல்கிறார் : “நான் நிலவைக் காட்டினால், நிலவைப் பார்க்காமல், எனது சுட்டுவிரலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்”, என்று சாடுவார். நேற்றைக்குச் சொல்லியதை இன்று மறுத்துப் பேசுவார்; இன்றைக்குச் சொல்லியதை நாளை மறுப்பார் ஓஷோவின் இந்த முரண்களின் பின்னே உள்ள தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அவரைத் தூற்றி இகழ்ந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அவர் முரண்பட்டப் பேச்சுக்களின் பின்னே உள்ள தத்துவம் தான் என்ன? “என்னையும் சேர்த்து, எவரையும் பின்பற்றாதீர்கள். கேளுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள்! எப்பொழுது ஒருவர் சொல்லுவதைக் கேட்டு அவர் பின்னால் போகிறீர்களோ, அப்போதே உங்களது சுதந்திரத்தை, சிந்திக்கும் திறனை அடகு வைக்கிறீர்கள், தொலைத்து விடுகிறீர்கள்! இது தன்னைத் தான் அறியும் முயற்சிக்குப் பெரிய தடை, இடையூறு. தன்னைத் தான் அறிவதே, அதை(That), அந்த ஒன்றை, அந்தத் தனிமுதலை, பரம்பொருளை, சச்சிதானந்தத்தை, நிர்வாணத்தை, சடோரியை உணர்வதாகும்.”
ஒரு புத்தகத்தில் கிடைத்தவரிகள்