2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அதிகப்படியாக மொஹம்மட் ரிஸ்வான் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் மதீஷ பத்திரன 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 15 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணி சார்பில் அதிகப் படியாக குசல் மெண்டிஸ் 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் இப்திகார் அஹமட் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதன்படி, இந்திய அணியுடன் இலங்கை அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.