September 21, 2023 1:32 pm

‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்: கவுதம் மேனன்‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்: கவுதம் மேனன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜை போடப்பட்டு அதன்பின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் அப்படியே நின்றுவிட்டது. சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கவிருந்த இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்தே பிரச்சினை மேல் பிரச்சினையை சந்தித்து வந்தது. கதாநாயகி தேர்வு செய்வதில் ஆரம்பித்த பிரச்சினை, சூர்யாவுக்கு கதை பிடிக்காமல் போனது வரை நீடித்தது. அதனால் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்தாமல் ஒத்திவைத்தனர். இப்படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், படத்தின் கதையை மாற்றி அமைத்துவிட்டதாக கவுதம் மேனன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சூர்யாவுக்கான கதை மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. சீக்கிரமே படத்தை ஆரம்பிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். போட்டான் கதாஸ் நிறுவனம் மூலம் கவுதம் மேனனே இப்படத்தை தயாரிக்கிறார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்