காதலர் தினத்தில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்!காதலர் தினத்தில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்!

 

விஸ்வரூபம் 2 படம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளிவர போகிறதாம்.

கமல் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை ‘விஸ்வரூபம்-2’ என்ற பெயரில் இயக்கி, நடித்து வருகிறார் கமல். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைவிட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

படம் முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு குடியரசு தினமான ஜனவரி-26 என்றும் தேதி குறிக்கப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்றுதான் வெளிவர போகிறதாம். கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், வஹிதா ரஹ்மான் என பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் பாடல்களை ஜனவரி மாதத்தின் இடையிலும், படத்தை பிப்ரவரி 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம் கமல். அதற்கு முன்பாக ரஜினியின் கோச்சடையான் படத்தை ஜனவரி 26ல் ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வருகின்றன.

 

ஆசிரியர்