September 22, 2023 5:15 am

“ஸ்ருதி ஹாசன்” மருத்துவமனையில் திடீர் அனுமதி!!!“ஸ்ருதி ஹாசன்” மருத்துவமனையில் திடீர் அனுமதி!!!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகை ஸ்ருதி ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காகவும் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் ‘யவடு’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் யவடு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ருதி ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதை சகித்துக்கொண்டு அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது. வயிற்று வலி அதிகமானதால் நிகழ்ச்சி முடிந்ததும் உடனே ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்ததால் அவர் சோர்வாக இருக்கிறார் என்பதால் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வெடுத்தப் பிறகு ஸ்ருதி வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது பற்றி ஸ்ருதிக்கு நெருங்கியவர்கள் கூறும்போது, தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஸ்ருதி சோர்வாக இருந்து வந்தார். அவருக்கு ஃபுட் பாய்சன் பிரச்னை ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது என்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்