வில்லனிடமிருந்து ஹீரோவை காப்பாற்றிய நயன்தாரா! தமிழ் சினிமாவில் புதுமைவில்லனிடமிருந்து ஹீரோவை காப்பாற்றிய நயன்தாரா! தமிழ் சினிமாவில் புதுமை

பொதுவாக தமிழ்ப் படத்தில் கதாநாயகியை வில்லன் கடத்திக்கொண்டு சென்றுவிடுவார். ஹீரோ அவரை கஷ்டப்பட்டு பல சண்டைகள் போட்டு காப்பாற்றுவார். முடிவில் சுபம் என்று தான் இதுவரை நாம் தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கின்றோம். முதல் முறையாக ஹீரோவை வில்லன் கடத்திக் கொண்டு செல்கிறார். அவரை பல சாகசங்கள் செய்து ஹீரோயின் காப்பாற்றுகிறார். இப்படி ஒரு கதைதான் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடத்தப்பட்ட காதலனாக கணேஷ் வெங்கட்ராமனும், அவரை மீட்கும் காதலியாக நயன்தாராவும், கடத்தும் வில்லனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்த த்ரில்லிங் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது பெங்களூரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நயன்தாரா முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெயம் ரவியுடன் அவர் மோதும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் க்ளைமாக்ஸில் இருக்கின்றதாம். வில்லன் வேடத்தை அதுவும் நயன்தாராவுடன் மோதும் வில்லன் வேடத்தை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என ஜெயம் ரவியிடம் கேட்டால் படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த கேரக்டரை நான் எதற்காக ஏற்றுக்கொண்டேன் என்று எனக் கூறுகின்றார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் செல்வகுமார் கலையில் உருவாகும் இந்த படத்தை ஏஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. புடத்துக்கு பொருத்தமான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா.

ஆசிரியர்