September 21, 2023 2:33 pm

சமந்தாவுக்கு எதிராக செய்தி வெளியிடவில்லை – சமந்தாசமந்தாவுக்கு எதிராக செய்தி வெளியிடவில்லை – சமந்தா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். விஜய்யின் தலைவா, அஜீத்தின் வீரம் படங்களைப்போன்று இப்படமும் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் சமந்தாதான் நாயகி என்பது ஏற்கனவே முடிவாகி அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் இப்போது அப்படத்தில் இந்தி நடிகை ஒருவரும் இன்னொரு நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக, இப்படத்தில் நடிப்பதால் உற்சாகத்தில் இருந்து வந்த சமந்தா, இப்போது கடும் அதிருப்தி மனநிலையில் உள்ளாராம். இதனால் இந்த படத்தை விட அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் சமந்தாவின் ஆர்வம் திரும்பி நிற்கிறதாம்.

இந்த நிலையில், சினிமாவில் தனக்கு பிடிக்காத விசயங்கள் எங்கு நடந்தாலும் அதுபற்றி தனது டுவிட்டரில் சமந்தா கருத்து சொல்லி வரும் நிலையில், அஞ்சான் படத்தில் இன்னொரு நாயகி இருப்பது குறித்து சமந்தா தரப்பு அதிருப்தியான தகவலை வெளியிட்டுள்ளதாகவும் இணையதளங்களில் சூடான செய்திகள் உலவி வருகின்றன. அதில், பட நாயகன் சூர்யாவின் தலையீடு காரணமாக, சமந்தாவை ஓரங்கட்டிவிட்டு இந்தி நடிகையை இறக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சான் டீம், சமந்தாவிடம் இதுபற்றி கேட்டபோது, எனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. நான் தமிழ் சினிமாவுக்கு வருவதால் புகைச்சலில் இருக்கும் யாரோதான் இப்படி வதந்தி பரப்பி விட்டுள்ளனர் என்று கற்பூரத்தில் அடித்து சத்யம் செய்யாத குறையாக கூறிவருகிறாராம். அதோடு, இனி டுவிட்டரில் கருத்து பரிமாறுவதையும் நிறுத்தப்போகிறாராம் சமந்தா.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்