September 27, 2023 1:35 pm

தமிழ்சினிமாவில் புதிய மாற்றம் | 2015 ல் அஜீத்தின் சம்பளம் 50 கோடி?தமிழ்சினிமாவில் புதிய மாற்றம் | 2015 ல் அஜீத்தின் சம்பளம் 50 கோடி?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2015 ஆம் ஆண்டு அஜீத்திற்கு ஒரு படத்தில் நடிக்க 50 கோடி தரவுள்ளதாக  தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறிவருவதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் பரவியுள்ளன.

தமிழ்சினிமாவில் அஜீத்தால் வாழ்ந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர் என்றாலும் முழுமையாக வாழ்ந்தவர் ஏ.எம்.ரத்னம்தான். பிரம்மாண்ட படங்களை எடுத்து  பெரும் வெற்றி பெற்றவர் ஏ.எம்.ரத்னம். இந்நிலையில் சமீபகாலத்திற்கு முன்பு அவர் எடுதத் சில படங்கள் சரிவர ஒடாதால் நஷ்டம் அடைந்தார்.

மேலும மகன்களின் சொந்த நடிப்பு, சொந்த இயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.  கடும் பிரச்சனையில் இருந்த அவருக்கு, அவரால் வளர்ந்த ஹீரோக்கள் கூட உதவவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்செய்வதறியாமல் திகைத்து நின்ற நேரத்தில் தோல்கொடுத்து ஆறுதளித்தவர் அஜீத். அதன்பிறகு உருவான படம் தான் ஆரம்பம். இதன் பின் சரிவில் இருந்த மீண்ட ரத்னம் தற்போது தொடர்ந்து அஜீத் கால்ஷீட் கொடுக்க, இதோ மறுபடியும் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

தற்போது அஜீத் நடிக்கவுள்ள படத்திற்கு பிறகு  ஒரு வேறொரு படத்தில் நடித்துவிட்டு மீண்டும் ஏ.எம்.ரத்னத்திற்கே கால்ஷீட் தருவதாக அஜீத் வாக்குறுதி கொடுத்துள்ளாராம் அந்த படத்திற்குதான் ஐம்பது கோடி சம்பளம் தருவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ரத்னம் கூறிவருகிறாராம்…

 

ajith-au4-2008

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்