ஹர்ஷிகா மறுப்பு -சிம்புவின் முத்தம் வீடியோவில் நானில்ல ஹர்ஷிகா மறுப்பு -சிம்புவின் முத்தம் வீடியோவில் நானில்ல

நடிகர் சிம்பு ஒரு பெண்ணை முத்தமிடுவது போன்ற வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நட்சத்திர ஓட்டலில் இந்த வீடியோ படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் திரைப்பட விருது விழாவுக்கு நடிகர், நடிகைகள் சமீபத்தில் சென்று இருந்தனர்.

அப்போது ஓட்டலில் பொருத்தப்பட்டு இருந்த வீடியோவில் இந்த சர்ச்சை படம் பதிவானதாக கூறப்படுகிறது. வீடியோவில் முத்தமிடும் ஆண் சிம்பு என்றும் பெண் கன்னட நடிகை ஹர்ஷிகா என்றும் கூறப்பட்டது. இதனை ஹர்ஷிகா மறுத்துள்ளார். அவர் கூறும் போது முத்த காட்சி வீடியோவில் இருப்பது நான் அல்ல. இந்த விவகாரத்தில் என் பெயரை தவறாக இழுத்து விட்டுள்ளனர் என்றார்.

சிம்புவும் படத்தில் இருப்பது நான் இல்லை என்று மறுத்து இருக்கிறார்.

ஆசிரியர்