Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுவையான வாய்ப்பன் செய்வது எப்படி?

சுவையான வாய்ப்பன் செய்வது எப்படி?

1 minutes read

வாய்ப்பன்
  • வாய்ப்பன் செய்வது எப்படி?

உங்கள் சுவையை தூண்டும் வாய்ப்பன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வாய்ப்பன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  கோதுமை மாவு – 2 கப்
  •  நன்கு பழுத்த வாழைப்பழம் – 2 (பெரியது)
  •  சீனி – அரை கப்
  •  பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
  •  எண்ணெய் – பொரிப்பதற்கு
  •  உப்பு

உணவு செய்முறை : வாய்ப்பன்

  • Step 1.முதலில் கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவேண்டும். பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • Step 2.மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவேண்டும்.
  • Step 3.பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். இப்பொழுது வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • Step 4.பின்னர் அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாய்ப்பன் தயார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More