ரம்யா கிருஷ்ணனின் இந்த வளைகாப்பு புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’படையப்பா’ திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில் ரஜினிக்கே சவால் விடும் வகையில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அதன் பின்னர் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் சிவகாமி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போதைய கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகள் தங்களது பழைய புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தனது வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலை பக்கத்தை பகிர்ந்துள்ளார் ஒரு புகைப்படத்தில் தனது இரண்டு பெரியம்மாக்களும் வளைகாப்பு தினத்தில் தனக்கு வளையல் போடும் புகைப்படத்தை பதிவு செய்து அவர்கள் இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு புகைப்படத்தில் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை தனது அம்மாவே நின்று புகைப்படம் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். ரம்யா கிருஷ்ணனின் இந்த வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்