ரைஸ் கட்லெட்

தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
உருளைக்கிழங்கு – 1 வேகவைத்து துருவியது
கேரட் – 1 துருவியது
புதினா இலை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
எண்ணெய்

செய்முறை:

  1. பாத்திரத்தில், சாதம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கேரட், புதினா இலை, கொத்தமல்லி இலை போடவும்.
  2. அடுத்து இதில், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும்.
  3. எல்லாவற்றையும் கலந்து விட்டு, கையால் பிசையவும்.
  4. கையில் சிறிது எண்ணெய் தடவி, கட்லெட் கலவை’யை சிறிய வடை போல் தட்டவும்.
  5. பேன்’னில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த கட்லெட்’களை போடவும்.
  6. ஒவ்வொரு பக்கமும், மூன்று நிமிடம் வறுக்கவும்.
  7. இருபுறமும், பொன்னிறமானதும், எடுக்கவும்.
  8. அருமையான ரைஸ் கட்லெட் தயார்.

ஆசிரியர்