உலக சினிமா பற்றி பேசும் “காட்சி மொழி” காலாண்டிதழ்!

உலக சினிமாக்களைப் பற்றிப்பேசும் காத்திரமான “காட்சி மொழி” இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது.

புகழ் பெற்ற உலக சினிமாக்களை பற்றிய இதுவரை ஆவணப்படுத்தப்படாத விவரணைகளை உள்ளடக்கியது, சினிமா மொழியியல் கோட்பாடுகளைப் பேசுவது, உலக சினிமா மேதைகளை அறிமுகம் செய்வது, உலகத் தரத்திலான சினிமாக்களை விவாதிப்பது, சினிமா தொழில்நுட்பங்கள் பற்றிய அறிமுகம், சினிமா அழகியல் தொடர்பான பதிவுகள் மற்றும் அரசியல் உள்ளடக்கம் கொண்ட உலக சினிமா பார்வை என்ற வகைகளில் கட்டுரைகள் வெளியாகும்.

எனவே, அவ்வாறான கட்டுரைகளை அடுத்த இதழுக்காகவும் படைப்பாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள்.

கடந்த காலங்களில் பேசப்பட்டவைகளை திரும்பப் பேசுவது, தமிழ் சினிமாக்களைப் பற்றிய வழமையான பதிவுகளைத் தவிர்ப்பது. இதுவே படைப்பாளர்களிடமிருந்து எமது எதிர்பார்ப்பு என அதன் ஆசிரியர் கூறுகின்றார்.

காட்சி மொழி இதழைப் பெற மற்றும் மேலதிக தொடர்புக்கு

மாரி மகேந்திரன் +94 76371 2663
mariemahendran134@gmail.com
thirai.magazine@gmail.com

ஆசிரியர்