செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி | பா.உதயன்

முள்ளிவாய்க்கால் கஞ்சி | பா.உதயன்

0 minutes read

முள்ளிவாய்க்கால் கஞ்சி
எங்கள் மூச்சை காத்தது
உப்பில்லாத கஞ்சி
எங்கள் உயிரைக் காத்தது

வலிகள் சுமந்த நாட்கள்
மறக்க முடியா நினைவு
சிலுவை சுமந்த காலம்
கனவு தொலைந்த சோகம்

பொழுது விடியா நேரம்
பசியில் அழுத குழந்தை
பால் சுரக்கா முலைகள்
எத்தனை தாயின் ஓலம்

சொல்ல முடியா துயரம்
எங்கள் துன்பம் சுமந்த வாழ்வு
சிலுவை காவிப் போனோம்
கல்வாரி மலையை நோக்கி

நிலவு மறையும் நேரம்
தொலைந்து போன உறவு
எங்கு சென்றாய் மகனே
எத்தனை தாயின் கண்ணீர்
இன்னும் ஏங்கும் இதயம்

எவரும் காண சோகம்
எத்தனை துன்பம் சுமந்தோம்
மறந்து போக முடியா
எங்கள் வாழ்வின் கதைகள் இவைகள்.

-பா.உதயன் ✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.