Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் குதிகால் வாதம் நீக்க வழிவகைகள்.

குதிகால் வாதம் நீக்க வழிவகைகள்.

2 minutes read

குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், யூரிக் அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றால் பக்க விளைவுகள் உண்டு. ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். அப்படியும் வலி எடுத்தால், காலையில் எழுந்த உடனேயே கால்களைத் தரையில் வைக்கக் கூடாது. கால் விரல்களைச் சிறிது நேரம் நன்றாக உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும், இதுபோல் மடக்கி விரியுங்கள்.

இதனால் அந்தப் பகுதிக்குப் புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு, மேற்கண்ட எளிய பயிற்சியிலேயே வலி மறைந்துவிடும்.அதேபோலக் கீழ்க்கண்ட பயிற்சியையும் செய்யலாம்.

காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கிற பொருட்கள் அங்கிருந்து விலகிவிடும்.

இதனால் குதிகால் வலி குறையும். இதைப் பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலி நிரந்தரமாக விடைபெறும்.பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும். குறிப்பாக, ESWT எனும் ஒலி அலை சிகிச்சையும் IFT எனும் வலி குறுக்கீட்டு சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.

இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில் ‘ஹைட்ரோகார்ட்டிசோன்’ (Hydro cortisone) என்ற மருந்தை ’லிக்னோகைன்’ எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும். எலும்பு நோய் நிபுணரின் ஆலோசனைப்படி இதைச் செய்ய வேண்டும்.

என்றாலும், இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால், கடைசியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More