ஐ.எஸ்-யை தவறாக எடை போட்டுவிட்டோம்: ஒபாமாஐ.எஸ்-யை தவறாக எடை போட்டுவிட்டோம்: ஒபாமா

ஈராக் ராணுவத்தின் திறனையும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலையும் தவறாக எடைபோட்டுவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

இதற்கு முன்பு நடைபெற்ற இராக் போரின்போது, சன்னி பழங்குடியினரின் உதவியுடன் அல் காய்தா தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் ஒடுக்கியது. சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, பல பகுதிகள் அரசாட்சி இல்லாத நிலையில் இருந்தது. அந்தப் பகுதியை தீவிரவாதிகள் எளிதாக கைப்பற்றி விட்டனர்” என்றார்.

முன்னதாக ஒபாமா செய்தியாளர்களிடம் கடந்த மாதம் பேசியபோது, “இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை அமெரிக்க உளவுத்துறையினர் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அதே போல, இராக்கை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் திறன் இராக் ராணுவத்திற்கு இல்லை என்பதையும் உளவுத்துறையினர் கணிக்கத் தவறிவிட்டனர்” என்று தெரிவித்திருந்தார்.

 

ஆசிரியர்