பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம்பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம்

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற 4 விமானப் பணிப்பெணகள் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமாகியுள்ளனர் என்று ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் 16-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பி.ஐ.ஏ.-யும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் மீது சர்வதேச விமான போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அந்த மீடியா தெரிவித்துள்ளது.

17 ஊழியர்கள் வேலைப்பார்க்கும் விமான நிறுவனத்தில் 36 விமான போக்குவரத்து சேவை மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது

ஆசிரியர்