ஊரடங்கு வேளையில் யாழில் இடம்பெற்ற சோகம்! இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மீசாலையில் யுவதி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். தென்மராட்சி – மீசாலை கிழக்கில் நேற்று (09) மாலை 4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்