June 2, 2023 12:28 pm

இன்று முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.

அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் திகதி வரை மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும், 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை வங்கிகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை (10 நோட்டுகள்) வரை மாற்றி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்