September 28, 2023 10:27 pm

கொலம்பியாவில் கடுமையான நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 6.3 ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.

தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கொலம்பியாவில்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பின் அதிர்வும் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்