Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் ரஷ்ய யூரி ககாரின் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் ரஷ்ய யூரி ககாரின் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read
 
விண்வெளி ஆதிக்க போட்டியில் அமெரிக்காவை வென்ற ரஷ்யா !
——————————————————
             – ஐங்கரன் விக்கினேஸ்வரா
வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளான 1961 ஏப்ரல் 12இல் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆனார். இது விண்வெளித்துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் அமெரிக்காவுடனான சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரும் வெற்றியாகும்.
ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின்
முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற மனிதனே ரஷ்ய விண்வெளி வீரரான யூரி ககாரின் எனும் பெருமையை அவர் வரலாற்றில் பெருகிறார்.
யூரி ககாரின் (YURI GAGARIN). இவர் வாழ்ந்தது 34 ஆண்டுகள் அதன். ஆனால் நூறு ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள் சாதித்ததைவிடப் பன்மடங்கு சாதித்துப் புகழ் ஏணியின் உச்சியைத் தொட்டவர்.
இன்று யூரி ககாரினால் மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 62 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.
“உலகத்திலிருந்து வெகு தொலைவில், இங்கே நான் ஒரு தகரப் பெட்டியில் அமர்ந்திருக்கிறேன். பூமி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இங்கிருந்து என்னால் எதுவும் செய்ய முடியாது.” என டேவிட் போயின் ஸ்பேஸ் ஒடிடி இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளை விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான யூரி ககாரின் கூறிய வரலாற்றுத் தருணமது.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் உலக நாடுகளின் பல ஆண்டுகாலக் கனவான, விண்வெளிப் பயணத்தை முதன் முதலில் வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர்தான் ககாரின், சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் 1 (VOSTOK 1) என்ற விண்கலத்தில் ஏறி 108 நிமிடங்களில் உலகை வலம் வந்து ஒரு வியத்தகு சாதனையைப் பதிவு செய்தார்.
பல்லாண்டு கால கனவை நனவாக்கியர்:
ரஷ்யாவில் பிறந்தவர் எனினும் உலக நாடுகளின் பல ஆண்டுகாலக் கனவை நனவாக்கியதன் மூலம் தான் பிறந்த ரஷ்ய நாட்டிற்கும், உலகிற்கும் பெருமை சேர்த்தார். இன்றைக்கு 62 ஆண்டுகளுக்கு முன்னரே விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் பாலமமைத்தார். இவரது இத்தகு சாதனை இன்று வரை உலக மக்களின் நன்மையை நாடியதுடன் விஞ்ஞானத் தொழில்நுட்ப சாதனைகளின் முன்னோடியாகத் திகழ்கிறது.
இவருக்குப் பின்னர் உலக நாடுகளிலிருந்து பல்வேறு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி – நிலவுக்குச் சென்று பல தொடர் ஆராய்ச்சி களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
உலகின் பிரபலமான ரஷ்ய ஹீரோ :
சாதாரண விவசாயின் மகனான யூரி ககாரின் குறித்து அவர் விண்வெளி பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு வரை பலருக்கும் தெரியாது. ஆனால், அவர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பி வந்ததும், உலகம் முழுவதும் அவர் பிரபலமானதுடன், ரஷ்யாவின் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
பூமிக்கு திரும்பிய பின்னர், தனது நற்பெயரை பயன்படுத்தி சோவியத் ஒன்றியத்தின் பெயரை உலக அரங்கில் உயர்த்துவதற்காக அவர் செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா, பின்லாந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, கியூபா, பிரேசில், கனடா, ஹங்கேரி, இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணித்தார்.
ககாரின் தனது முதல் விண்வெளி பயணத்திற்கு பிறகு மீண்டும் விண்வெளி செல்ல விருப்பம் தெரிவித்தாலும் அவர் நாட்டில் பிரபலமான நபராக விளங்கியதால், பாதுகாப்பு கருதி வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், மற்ற விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து, அவர் புகழ்பெற்ற ஜோகோவ்ஸ்கி இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மையத்திற்கு பயிற்சி பெறுவதற்காக சென்றார்.
1968ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டம் பெற்ற அவர், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் மிக்-15 ரக விமானத்தை பரிசோதித்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தனது சக விமானியுடன் அவரும் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34 மட்டுமே.
இன்னும் இந்த அண்டவெளியில் புதைந்து கிடக்கும் பல்வேறு உண்மைகளை ஆராயத் தொடர் பயணம் மேற்கொள்ளும் பல நூற்றுக்கணக்கான விண்கலங்களுக்கும் யூரி ககாரின் ஒரு விடிவெள்ளியாக மிளிர்கிறார்.
யூரி ககாரினுக்கு தான் பயணித்த விண்கலத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கூட இருக்கவில்லை. இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்கலத்தில், யூரி ககாரின் ஒரு விண்வெளி வீரரை போன்றல்லாமல் வெறும் ஒரு பயணியாகவே அவரால் உணர முடிந்தது.
விண்கலங்களின் விடிவெள்ளி :
கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவர் தெரிவித்த தகவலின்படி, விண்கலத்தின் ஜன்னலிலிருந்து அவர் பூமியின் அழகை கண்டார். பூமியில் மேகங்களின் நிழல் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை உருவாக்கி இருந்தது.
ககாரின்்மிகுந்த துணிச்சலுடன்,
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். இந்த வெற்றியை மறுக்க முடியாததாக வரலாறாக மாற்றியது. வரலாற்றை உருவாக்க ஒரு ஆபத்தான சவாலை ஏற்றுக்கொண்டார். விண்வெளி பயணம் குறித்து மனிதகுலத்துக்கு மிக குறைந்த அளவே புரிதல் இருந்த காலக்கட்டத்தில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
இப்பயணத்தில் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால், ககாரின் பயணித்த விண்கலத்தில் பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், அவரது உயிரை காப்பாற்றக்கூடிய எவ்வித அவசர மீட்பு அமைப்பும் அப்போது இருக்கவில்லை.
ஆபத்தை எதிர்த்து போரிட்ட
யூரி ககாரின் வரலாற்றை படைத்தார்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More