Thursday, October 22, 2020

இதையும் படிங்க

மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

மொகல் ஈ ஆஸம் - திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் ( தோல்வி) கதை

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 5 | பத்மநாபன் மகாலிங்கம்

கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும்,...

கொரோனாவால் ட்ரம்ப் கடுமையாக பாதிக்கப் பட்டால் என்ன நேரும்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்...

நானாட்டான் நாணயங்கள் பாண்டியருக்கு உரியதா? | பேராசிரியர் புஸ்பரட்ணம்

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில்  நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

ஆசிரியர்

எதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்

”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”
– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க  எழுத்தாளர்

கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம்.

பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப்பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான்  என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டத்தரணித் தனமாகப் பேசுகிறார்.பரிகார நீதி மட்டுமல்ல நிலைமாறு கால நீதியும் தூய நீதி அல்ல. அவை அரசியல் நீதிகள்தான். அரசுகளின் நீதிகள்தான். அரசுகளால் தீர்மானிக்கப்படும் நீதிகள்தான்.

பெருந் தமிழ்ப் பரப்பில் அதிக தொகையினர் கேட்பது பரிகார நீதியை. ஆனால் உலக சமூகமும் ஐநாவும் தமிழ்மக்களுக்குப் பரிந்துரைத்திருப்பது நிலை மாறுகால  நீதியை.

கூட்டமைப்பு கொள்கை அளவில் நிலைமாறுகால நீதியை  ஏற்றுக்கொண்டு விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த பொழுது அது ஐநா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதிக்காகானது. கூட்டமைப்பு ஐநாவின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதோடு அத்தீர்மானத்தின் பிரகாரம் அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு கால அவகாசங்களையும் ஏற்றுக்கொண்டது.

நிலைமாறு நீதியின் கீழான தீர்வுக்கான முயற்சிகளைத்தான் கூட்டமைப்பு தன்னுடைய அடைவு என்று நம்புகிறது. நிலைமாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமையின்  பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்தது. மீள நிகழாமை எனப்படுவது ஒரு பிரச்சினைக்குக் காரணமாக இருந்த வேர்நிலைக்  காரணிகளை இனங்கண்டு அவை மறுபடியும் தலைதூக்க முடியாதபடிக்கு கட்டமைப்புசார் மாற்றங்களை செய்வது. இதன்படி இலங்கைத்தீவின் யாப்பை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் யாப்புக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்க வேண்டும்

இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு பிரிக்கப்படுகிறது.அவ்வாறு நீதியைக் கேட்டால் தீர்வைப் பெற முடியாது என்று சிங்கள் லிபரல்களே கூறுகிறார்கள்.குற்ற விசாரணையும் தீர்வும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை என்று ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச கூறினார்.

நிலைமாறுகால நீதியின் பிரகாரம் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு ஓர் இடைக்கால வரைபுவரை நிலைமைகள் முன்னேறின. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கவிழ்த்தத்ததோடு இடைக்கால அறிக்கையை இறுதியாக்கும் முயற்சிகள் இடை நிறுத்தப்பட்டன. மைத்திரிபால சிறிசேன நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர். அவர் ஆட்சியைக் கவிழ்த்ததும் நிலைமாறுகால நீதி அனாதையாகியது.

இப்பொழுது ராஜபக்சக்கள் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் சம்பந்தர் நம்புகிறார் அமையவிருக்கும் புதிய நாடாளுமன்றத்தில் முன்னைய இடைக்கால அறிக்கையை தொடர்ந்து முன் நகர்த்தலாம் என்று. அது விடயத்தில் ஐநாவும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்றும் அவர் நம்புகிறார். அவருடைய தேர்தல்கால உரைகளில் அதை உணர முடியும்.

எனவே நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்ட  கூட்டமைப்பு பரிகார நீதி பொறுத்து அதிகம் நம்பிக்கையோடு இல்லை. அதுமட்டுமல்ல பரிகார நீதியை பெறுவதற்கான வழி முறைகளிலும் அவர்கள் நம்பிக்கையோடு இல்லை. கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் பரிகார நீதியைப் பெறுவதில் இருக்கக்கூடிய சட்டச் சிக்கல்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

அதாவது பரிகார நீதியை பெறுவதாக இருந்தால் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். விசாரிக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் ஓர் உறுப்பு நாடு அல்ல. அதனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுத்தமுடியாது. எனவே அதற்கென்று ஐநாவின் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அங்கேயும் பிரச்சினை உண்டு. அரசாங்கத்திற்கு சார்பாக காணப்படும் சீனாவும் ரஷ்யாவும் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும்போது அந்தத் தீர்மானம் வெற்றி பெறாது.

எனவே அனைத்துல யதார்த்தத்தின்படியும் ஐநா யதார்த்ததின்படியும்  பரிகார நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கூட்டமைப்பு நம்புகின்றது. அதனால்தான் அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியை கோரி போராடப் போவதாக வாக்குறுதிகள் எதனையும் வழங்கவில்லை.

அதேசமயம் கூட்டமைப்புக்கு மாற்றாக போட்டியிடும் இரண்டு தரப்புக்களான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பரிகார நீதியை நோக்கி தமது வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. இவ்விரண்டு கட்சிகளும் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்கின்றன. குறிப்பாக விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் இனப்படுகொலை நடந்தது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். எனவே அவர் தன்னுடைய தீர்மானத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்த வேண்டும்.

மேற்படி இரண்டு கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளில் ஒரு விடயத்தில் ஒற்றுமையாக காணப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் கோரியுள்ளன.

அதோடு, பரிகார நீதியை பெறுவது சாத்தியமில்லை என்று கூறும் தரப்புக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் ஆங்காங்கே பதில் கூறி வரக் காணலாம். அவர்கள் ரோஹியங்யா முஸ்லிம்கள் தொடர்பில்  காம்பியா நாடு மேற்கொண்ட நகர்வைச்  சுட்டிக் காட்டுகிறார்கள். விசேஷ தீர்ப்பாயத்தை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறுகிறது.

ரோகியங்கா முஸ்லிம்களின் புவிசார் அரசியல் யதார்த்தம் வேறு. ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் யதார்த்தம் வேறு. அது தனியாக ஒரு கட்டுரையில் ஆராயப்பட வேண்டும். தவிர இக்கட்டுரையில் முன்பு கூறப்பட்டதை இங்கு திரும்பக் கூறலாம். நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும் இரண்டுமே அரசுகளின் நீதிகள்தான். அரசுகள் எப்பொழுதும் நிலையான நலன்களின் அடிப்படையிலேயே சிந்திக்கும். அங்கே நீதி நியாயம் அறம் என்பவையெல்லாம் கிடையாது. அன்பு பாசம் காதல் என்பவையெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க நலன் சார் வர்த்தக-ராஜீய உறவுகள் தான். இந்த அடிப்படையில் அரசுகளை வெற்றிகரமாகக் கையாள்வதன் மூலம் மட்டுமே பரிகார நீதியோ அல்லது நிலைமாறுகால நீதியோ எதுவானாலும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய இறுதி இலக்கை அடைய முடியும்.

சம்பந்தர் கனவுகாணும் நிலைமாறுகால நீதிக்கூடாகக் கிடைக்ககூடிய  ஓர் அரசியல் தீர்வுக்கும் அதாவது மைத்திரியால் இடை நிறுத்தப்பட்ட யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால வரைவை ராஜபக்சக்களின் புதிய நாடாளுமன்றத்தில் முன்னோக்கி நகர்த்துவது என்றால் அதற்கும் ஐ,நா. மேற்கு நாடுகள் இந்தியா போன்றவற்றின் அழுத்தப் பிரயோகம் வேண்டும்.  அரசாங்கத்தின் மீது நிர்ணயகரமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் மட்டுமே ராஜபக்சக்கள் குறைந்தது ஒரு தீர்வற்ற தீர்வுக்காவது இறங்கி வருவார்கள்.அதனால்தான் சம்பந்தர் சர்வதேசம் எம்பின்னால் நிற்கிறது. இந்தியா நிற்கிறது. என்று கூறவேண்டியிருகிறது.

எனவே நிலைமாறுகால நீதியின் விடயத்திலும் அரசுகளின் அழுத்தம் அவசியம். அதுதான் நான் இங்கே சொல்ல வருவது. நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும் அது அரசுகளின் தீர்மானம்தான். அரசுகளின் அழுத்தம்தான்.

எனவே ஈழத் தமிழர்களுக்கான இறுதி நீதி எனப்படுவது தூய நீதி அல்ல. அதை அரசுகள்தான் தீர்மானிக்கும்.

ஆயின் அரசற்ற தரப்பாபாகிய ஈழத்தமிழர்கள் எப்படி அரசுகளை வெற்றிகரமாகக் கையாள்வது?

அதற்குரிய முதல் முக்கிய நிபந்தனைதான் மக்கள் ஆணையைப் பெறுவது. மக்கள் அதிகாரத்தை பெறுவது. தேர்தல்களில் பரிகார நீதியை கோரும் தரப்புக்கள் மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி பெற வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் பரிகார நீதி குறித்துப் பேசும் பொழுது உலகம் அதைச்  செவிமடுக்கும். எனவே பரிகார நீதியைக் கோரும் தரப்புக்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி முதலாவது கட்டம்.

அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்துக்கு வெளியே வெகுஜன போராட்டங்களையும் ராஜியக் கட்டமைப்புகளையும் கட்டியெழுப்ப வேண்டும். இவற்றைச் செய்வதென்றால் முதலில் மாற்றுத்  தரப்புக்கள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பைத்  தோற்கடிக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள தேர்தல் கள நிலவரங்களின் படி அவ்வாறு கூட்டமைப்பை மாற்று அணி முழுமையாகத் தோற்கடிக்க கூடிய நிலைமைகள் குறைவாகவே காணப்படுகின்றன.

மிகக் குறிப்பாக மாற்று அணிகள் வடக்கு மையமாகவே காணப்படுகின்றன. அல்லது வேண்டுமானால் அவை வடக்கில்தான் பலமாகக் காணப்படுகின்றன என்று கூறலாம். அவை கிழக்கில் பலமாக  கால் ஊன்றவில்லை. வடக்கு கிழக்கு இரண்டு பகுதிகளிலும் பரவிக் காணப்படுவது கூட்டமைப்பு மட்டும்தான். இதுவே மாற்று அணியின் மிகப் பெரிய பலவீனம். எனவே மாற்று அணிக்கு கிழக்கில் மக்கள் ஆணையைப் பெற்றுக் காட்ட வேண்டும். தமிழர் தாயகம் முழுவதுக்குமான ஒரு மக்கள் ஆணையை மாற்று அணி பெற்றால்தான் கூட்டமைப்பின் முதன்மை கேள்விக்குள்ளாகும்.

இரண்டாவது பலவீனம் உண்மையான மாற்று அணி யார் என்பதிலேயே போட்டி நிலவுகிறது. மாற்று அணியை சேர்ந்த இரண்டு கட்சிகளும் ஒன்று மற்றதை மாறிமாறி விமர்சிக்கின்றன. இது வாக்காளர்களைச்  சலிப்படையச் செய்யக் கூடியது. வாக்காளர்கள் எப்பொழுதும் பிரம்மாண்டமான கூட்டுக்களை கண்டு கவரப்படுவார்கள். ஆனால் அப்படி ஒரு கூட்டை உருவாக்க மாற்று அணியால் முடியவில்லை.

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உண்டு. ஆனால் வாக்காளர்கள் மத்தியில் கூட்டு உற்சாகத்தைக் காண முடியவில்லை. இந்நிலையில் ஒரு வாக்களிப்பு அலையை கூட்டமைப்பாலோ அல்லது  மாற்று அணியாலோ  உற்பத்தி செய்ய முடியுமா?

இது மிகப் பரிதாபகரமான ஒரு நிலைமை.  கூட்டமைப்பையும் முழுமையாக தோற்கடிக்க முடியாது. மாற்று அணியும் முழுமையாக வெற்றி பெறப்போவதில்லை என்பது. அப்படி என்றால் தமிழ் மக்களின் அரசியல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலைமாறுகால நீதிக்கும் பரிகார நீதிக்கும் இடையே தத்தளிக்கப் போகிறதா ? தமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா? ஒரு கிறீஸ்தவ மதகுரு கேட்டது போல “குறைந்தது நெருப்பை அணையவிடாமல் பாதுகாப்பதற்காவது” வாக்களிப்பார்களா?

நிலாந்தன்

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்

கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...

கடலின் அக்கரை போனோரே.. | முருகபூபதி

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

மஞ்சள் – தேங்காய் – வைரஸ் – இருபதாவது திருத்தம் | நிலாந்தன்

நாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள்...

தொடர்புச் செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கொல்கத்தா அணியின் புதிய தலைவரானார் ஓய்ன் மோர்கன்!

ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது துடுப்பாட்டத்தில்...

சிலியில் வன்முறை | இரண்டு தேவாலயங்கள் தீக்கிரை!

நாட்டை உலுக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த, எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும், முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி, தென் அமெரிக்க நாடான சிலியில், வன்முறையாக...

டக்ளஸ் – பவித்ரா கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி...

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் CSK!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் 34-வது லீக்...

விஜய் சேதுபதியின் 800 திரைப்பட சர்ச்சை | பட வாய்ப்பை நிராகரித்த அசுரன் பட நடிகர் ரீஜே

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை அசுரன் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரீஜே...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

துயர் பகிர்வு