பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இன்றையதினம் (20) பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 19 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதாரிபூர் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையிலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், 25 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.