September 25, 2023 6:57 am

G20 நாடுகளின் பிரகடனத்திற்கு சீனா வரவேற்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
G20 நாடுகளின் பிரகடனத்திற்கு சீனா வரவேற்பு

G20 நாடுகளின் பிரகடனத்தை வரவேற்பதாகச் சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் உறுப்பு நாடுகள் ரஷ்யாவைக் கண்டிக்கவில்லை; நிலத்தைப் பறிப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவை உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டன.

இதனையடுத்து, G20 கூட்டமைப்பு என்பது பொருளியல் ஒத்துழைப்புக்கு உரியதே தவிர, உலக அரசியல் பூசல்களுக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கும் தீர்வு காணும் தளம் அல்ல என்பதை அந்தக் கூட்டறிக்கை மறு உறுதிப்படுத்தியுள்ளதாக பெய்ச்சிங் தெரிவித்துள்ளது.

உலகச் சவால்களைச் சமாளித்துப் பொருளியல் மீட்புக்கு G20 நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் சாதகமான சமிக்ஞை அந்தப் பிரகடனம் என பெய்ச்சிங் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஐரோப்பாவை இணைக்கும் புதிய சரக்குப் போக்குவரத்துப் பாதைத் திட்டத்தையும் வரவேற்பதாகச் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

அதை அரசியல் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்று சீனா வலியுறுத்தியது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்