தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.
ஒரு குழு விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கையில் இன்று மற்றும் நாளை ஆய்வு மேற்கொள்கிறது.
அதேபோன்று மற்றைய குழு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் இன்று மற்றும் நாளை ஆய்வு செய்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர், ஆதனக்கோட்டை, மேலூர் பகுதிகளில் காலை 9 மணிக்கு மத்திய குழு ஆய்வு செய்கிறது. மற்றொரு குழு விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடிஇ செங்குளம்இ கீழ்குடியில் 11.30 மணிக்கு ஆய்வு செய்கிறது.