புதுடெல்லி: பக்ரீத் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கேரள அரசு 18, 19 மற்றும் 20ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஏ,பி, சி என அனைத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் இயங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த 3 நாள் தளர்வு மிகப்பெரிய தொற்று பரவலுக்கு வழி வகுக்கும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன் மற்றும் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘3 நாள் தளர்வு குறித்து 24 மணி நேரத்தில் கேரள மாநில அரசு பதில் அளிக்க வேண்டும். செவ்வாயன்று முதல் வழக்காக இது விசாரிக்கப்படும்” என்றும் உத்தரவிட்டனர்.