Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டன் பல்கலையில் தமிழ் துறையை நிறுவ நடைத் தொண்டு!

இலண்டன் பல்கலையில் தமிழ் துறையை நிறுவ நடைத் தொண்டு!

7 minutes read

சர்வதேச அளவில் தமிழ் மொழிக் கற்கையை நிறுவிப் பலப்படுத்தும் முயற்சிகள் அண்மைய காலத்தில் வலுப்பெற்றுகின்றன. அந்த வகையில் இண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவும் முயற்சிக்கு உலகமெங்கும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

அந்த வகையில் இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையினை நிறுவுவதற்கு ஆதரவாக நிதிதிரட்டும் வகையில் நடைத்தொண்டு விழா கடந்த 26ஆம் திகதி (South Harrow, Roxette Recreation Park) இலண்டனில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நடைத்தொண்டில் இதுவரை 65 நபர்கள் பதிவு செய்து நடைத்தொண்டில் ஈடுபடுவதுடன் £59700 பவுண்டுகள் நிதியை சேகரிக்க திட்டமிடப்பட்டதுடன், அன்றைய நாளில் சேகரிக்கப்பட்ட £24000 பவுண்டுகள் நிரந்தர வைப்புநிதியில் வைக்கப்பட்டது.

இந்த நடைத்தொண்டிற்காக கடந்த சித்திரை மாதம் முதல் ஒவ்வொரு கிழமையும் சந்திப்பு இடம்பெற்று திட்டமிடல் இடம்பெற்று வந்துள்ளது. இந்த சந்திப்பில் கவுன்சிலர்கள் முதல் நடைத்தொண்டுபுரிபவர்கள், நிர்வாகத்தினர், நலன்விரும்பகள் என பலரும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறுவர்களும் பெரியவர்களும் என குடும்பமாக சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடைத்தொண்டில் பங்கேற்றனர். நேரில் பங்கேற்க இயலாதவர்கள் அவரவர் இடத்தில் அருகிலேயே நடைத்தொண்டாற்றி நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியமை சிறப்பம்சமாகும்.

26ஆம் திகதி காலை பத்து மணியளவில் நடைத் தொண்டில் பங்கெடுப்பவர்களின் கலந்துரையாடலுடன் தொடங்கிய நிகழ்சியில் திரு சுப்ரம் சுரேஷ் வரவேற்புரையை நிகழ்த்தினார். 11 மணியளவில் தொடங்கிய நடைத்தொண்டு ஐந்து கிலோ மீற்றர் வரையில் பயணம் செய்யப்பட்ட நிலையில் 12.30 மணியளவில் நிறைவு பெற்றது.

இந்த நடைத்தொண்டு ஏற்பாட்டின் முக்கியத்துவத்தையும், SOAS பலகலைகழகத்தின் தமிழ்த்துறையின் சிறப்பின் பரப்புரையையும், திரு செலின் ஜோர்ஜ் அவர்கள் வழங்கினார். அத்துடன் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்படும் நடைத்தொண்டு பற்றி திரு சச்சி செந்தில் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதேவேளை நடைத்தொண்டில் கலந்து கொண்ட மாநகர சபை உறுப்பினர்களான திரு இளங்கோ இளவழகன் மற்றும் திரு பரம் நந்தா ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

இந்நடைத்தொண்டில் பங்கேற்று நட்சத்திர நிதி திரட்டுனர்களாக விளங்கும் திரு. சுப்பிரமணியம் தர்மேந்திரன், திரு எஸ். நிரஞ்சன், செல்வன் சாஜிதன் சிவதாஸ், செல்வி தர்சிகா சிவப்பிரியன் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்தனர்.

அத்துடன் 83 நாட்களில் 500 கி.மீ. நடந்து நிதி திரட்டிக் கொண்டிருக்கும் திருமதி. சங்கீதா ஜெசுரன் அவர்களும் தமது நடைத்தொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வின் நிறைவாக திருமதி வசந்தகுமாரி நித்தியானந்தா அவர்கள் நன்றியுரை வழங்க இலண்டன் SOAS பல்கலைகழக தமிழ் கற்கை நிறுவலுக்கு ஆதரவு திரட்டும் நடைத்தொண்டு நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More