3
இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் விசேட சோதனைகள் இடம்பெற்றன.
பொலிசாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
பாடசாலை சூழல் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது.
21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.