Sunday, May 9, 2021

இதையும் படிங்க

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

புலித்தாய் | கவிதையும் ஓவியமும்

கோயில் படிகளில்தேடுகிறோம் தெய்வத்தைவீட்டின் மூலையில்ஒரு சமையலைறையில்ஒளித்து வைத்து.அன்னைஒரு புலியாகவும் மாறுவாள்தன் குழந்தையை காக்க.நிகரற்ற பாசத்தைஊட்டும் அன்னை என்ற தெய்வம்எங்கும் எதிலும் நிறைந்த பூமி...

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு...

தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க...

ஆசிரியர்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை)

பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில வந்தனர். ஈருருளியில் வந்தனர். பள்ளி வளாகத்துள் வழமையான ஈருருளி நிறுத்தத்தில் நிறுத்தினர்.

அரக்க குணத்துடன் உரத்த குரலுடன் தடித்த பொல்லுடன் பெண். ஒருவரன்று, இரு பெண்கள். அப்பாவி மாணவரைத் தாக்கினர். அப்பெண்களுக்கு இயேசு பிரானின் கொள்கையைக் கற்பித்தாரா? வன்முறையைக் கற்பித்தாரா? அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) கிறித்தவ பாதிரியார்.

பிஞ்சுகளின் கால் தோல்கள் வெடித்தன. இரத்தம் பாய்ந்தது. அடிக்கு மேல் அடி. ஓலம் ஓலம் எனக் கதறினர் கன்றனைய மாணவர். எடு ஈருருளியை. கொண்டுபோ வெளியே. பெண்கள் மிரட்டினர்.

ஏப்பிரல் 9ஆம் நாள். வெள்ளிக்கிழமை, காலை 0800 மணியளவில் நிகழ்ந்தது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்துள் நிகழ்ந்தது.

அடித்தவர்கள் கிறித்தவர்கள். அடிவாங்கியவர் சைவ மாணவர். அடிவாங்கியோரில் மூவருக்குக் கடுங் காயங்கள். மருத்துவ மனையில் ஒரு நாள் தங்கி மருத்துவம் பார்த்த காயங்கள்.

படிக்க வந்தோர் துடித்தனர். பாடப் புத்தகங்கள் சிதறின. பள்ளிக் கூடத்துக்குள் இரக்கமற்ற அரக்கிகளின் வெறியாட்டம். கிறித்தவ அரக்கிகளின் வெறியாட்டம்.

அப்பாவிகள், ஒன்றும் அறியாதோர், தலைவாரி, நீறிட்ட நெற்றியராய், நிறைவான சீருடையில் வந்தனர். அடி வாங்கி அழுதனர்.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற அறவழிப் பெருந்தகையின் வரிகளை, இயேசு பிரானின் வரிகளை மனப்பாடம் செய்தவர் பாதிரியார்.

அடிக்கும் நோக்குடன் வராதவர், படிக்கும் நோக்குடன் வந்தவர், பால் மணம் மறந்த வளர்பருவச் சிறுவர். திருப்பி அடிக்கத் தெரியாதவர். அவர்களை அடி என்கிறார், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற வரிகளை மனப்பாடமாக்கிய பாதிரியார்.

இயேசு பிரானின் மலை உரை வரிகள் மனப்பாடத்துக்கு மட்டுமே. கூசாது நிலைமாறி வன்முறையில் ஈடுபடுவது கிறித்தவத் திணிப்புக்கு.

அருள்மிகு அம்பாளின் திருக்கோயில். திருக்கோயிலின் திருமரம் நாகலிங்க மரம். நாகலிங்கப்பூ மரம். அம்பாளின் திருவடிகளை நாகலிங்கப்பூக்களால் நிறைக்கும் மரம்

சங்கிலியன் போரில் தோற்றான். அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில் வெற்றி முரசு கொட்டினான் தளபதி பிலிப்பு இடிலிவரா. கோயிலை இடித்தான்.

வடக்கே படைகளை அனுப்பினான். கான்சுடன்டைன் தலைமையில் வந்த படைகள் தெல்லிப்பளையில் நாகலிங்கப் பூக்கள் சொரிந்து நல்ல அருள்பாலித்த அம்பாள் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கின.

தோராயமாக 500 கோயில்களை ஒரு சில வாரங்களில் பிலிப்பு இடிலிவேராவின் படைகள் தரைமட்டமாகின எனப் போர்த்துக்கேய வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

தரைமட்டமாக்கிய கோயில்களின் மேலே எழுந்தன கிறித்தவ தேவாலயங்கள். துப்பாக்கி முனையில் மிரட்டினர். மதுவும் சோறும் கொடுத்து மருட்டினர். மதம்மாறாவிட்டால் ஓட ஓட விரட்டினர்.

அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால் போர்த்துக்கேயரின் வன்முறையே 400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.

அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால் தெல்லிப்பளையில் மாணவச் செல்வங்கள் மீது வன்முறையே இன்றைய வரலாறு.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் மன்னியும் என்பது தேவாலயத்தில் வழிபாடு. அயலானைத் தூசித்து எதிர்ப்போரை வன்முறையால் அழித்தொழிப்போம் என்பதே போர்த்துக்கேயரின் அன்றைய கூப்பாட்டு வரலாறு.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னியும் என்பது தெல்லிப்பளைத் தேவாலயத்தில் வழிபாடு. அயலானைத் தூசித்து எதிர்ப்போரை வன்முறையால் அழித்தொழிப்போம் என்பதே தெல்லிப்பளையில் அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (American Ceylon Mission, ACM) இன்றைய கூப்பாட்டு வரலாறு.

ஒல்லாந்தர் வந்தார்கள். கத்தோலிக்க பாதிரிகளை ஓட ஓடக் கலைத்தார்கள். தெல்லிப்பளையில் போர்த்துக்கேயத் தேவாலயத்தை ஒல்லாந்தர் மடமாக்கித் (Dutch Hall) தங்கினார்கள். கிருத்தவப் பெயருடையோருக்கே முன்னுரிமை என்றார்கள். கிறித்தவப் போர்வை ஆட்சியாளர் முன்பு. சைவ வாழ்வு உள்ளத் தேவைக்கு. தெல்லிப்பளையார் சைவர்களாகத் தொடர்ந்தார்கள். சைவத் தமிழரின் கொடுமைகாண் வரலாறு.

ஆங்கிலேயர் வந்தனர். அருள்மிகு அம்மன் கோயிலை இடித்துக் கட்டிய தேவாலயத்தைத் தமதாக்கினர். 1813ஆம் ஆண்டு தெல்லிப்பளை வந்தவர் அமெரிக்க இலங்கை மதமாற்ற அமைப்பினைத் தொடக்கிய நியூவெல் இணையர்.

அறியாமை இருளில் சாத்தானின் நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள் சைவர்கள். அவர்களை மதம் மாற்ற வேண்டும் அறிவிலிகளாக இருப்பவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். நீயூவெல் இணையரை அனுப்பிய அமெரிக்கரின் நோக்கம்.

சைவர்கள் கீழானவர். ஐரோப்பியர் மேலானவர். சைவர்கள் நாகரீகம் அற்றவர். கிறித்தவர் நாகரிகர். அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் கற்பனை. Colonizers and those associated with them portrayed the native populations and their beliefs as inferior to European ways of being and living.

சித்த மருத்துவம் போலியானது. மேலை மருத்துவம் மேலானது. திருக்குறளைத் தந்த திண்ணைக் கல்வி மோசமானது. குறுந்தொகை தந்த குருகுலக் கல்வி கீழானது. சுழலும் பூமி எனச் சொல்லும் திருக்குறள் பொய். தட்டையானது பூமி எனச் சொல்லும் விவிலியம் மெய். சுழியத்தையும் (0) பின்னங்களையும் ஈந்ததமிழ் கீழானது. சுழியமே தெரியாத உரோம X எனும் எண் வடிவமே மேலானது.

1816இல் தெல்லிப்பளையில் கலவன் பாடசாலையைத் தொடங்கியதன் நோக்கம் படிப்படியாகச் சைவத் தமிழரை ஆங்கில மொழியாளராக்குக, நாகரீகமுற்றவராக்குக, கிறித்தவராக்குக. Gradually make the whole Saiva Tamil race in Sri Lanka and South India, English in language, civilized in habits, and Christian in religion. கலவன் பாடசாலையைத் தொடங்கிய இடானியேல் பூர் மற்றும் எட்வடர் வாரனின் நோக்கம் அவையே.

கலவன் பாடசாலை வெற்றி பெறவில்லை. பெண்பிள்ளைகளை 1823இல் தொடங்கிய உடுவில் பெண்கள் பாடசாலைக்கு மாற்றுகிறார்கள்.தொழில்நுட்பக்கல்லூரி அமைக்கிறார்கள். வெற்றி பெறவில்லை தொடக்கநிலைப் பாடசாலை தனியாகவும் மேல்நிலைப் பாடசாலை தனியாகவும் அமைக்கிறார்கள். வெற்றி பெறவில்லை.

 1940இல் இரண்டையும் இணைத்து யூனியன் கல்லூரி என்கிறார்கள்.

ஆங்கியேலயராகுக, சுழலும் பூமியைத் தட்டை என்றும் சுழியத்தை விட்டு உரோம X எழுதுமாறும் விளக்கேற்றி வழிபடுவதை விட்டு விளக்கணைத்து விழாக்காணும் நாகரீகராகுக,பதி,பசு, பாசம் என்னும் அறிவியல் சார்பை விட்டு அப்பமும் மதுவும் அருந்தும் கிருத்துவ மதத்தவராகுக. இவற்றை நடைமுறையாக்கிய நச்சு விதைகளே யூனியன் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியும் மானிப்பாய் மருத்துவ மனையும் வட்டுக்கோட்டைப் பாதிரிப் பயிலகமும்.

அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) இன அழிப்பு முயற்சிக்குக் கல்விசார் கருவிகளாயின, தெல்லிப்பளை, உடுவில், மானிப்பாய், வட்டுக்கோட்டை முன்னெடுப்புகள்.

இத்தகைய நச்சு விதைகள், மண்ணின் மரபுகளை முடக்கும். நாகரீக வளர்ச்சியைத் நிறுத்தும். புற்று நோய் போலப் படிப்படியாக இனத்தின் இறப்பை உறுதிசெய்யும். Gradually make the whole Saiva Tamil race non-existant.

கல்வியைக் கிறித்தவ மேலாதிக்கத்திலிருந்து அகற்றுவதற்கு முதற்படி கன்னங்காராவின் அனைவருக்கும் இலவயக் கல்வி. அடுத்து நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. அனைத்துப் பள்ளிகளும் நாட்டுடமை ஆகலாம் என அறிவித்தார்.

அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் ACU, தாம் 1940இல் தொடங்கிய தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை அரசுக்குக் கையளித்தனர்.

122 அடி நீளம் 122 அடி அகலம் கொண்ட, கிறித்தவத் தேவாலயம் சார்ந்த நிலம், தெல்லிப்பளைச் சந்தி மூலை நிலம் தவிர்ந்த, பூர்விகத்தில் வரலாற்றுக்கூடாக அருள்மிகு அம்மன் கோயில் நிலங்களாயிருந்து, அடாத்தாகப் போர்த்துக்கேயர் கைப்பற்றிய அனைத்து நிலங்களும் அரசுக்குரியதாயிற்று, மக்களுக்குரியதாயிற்று.

09.04.21இல் இரக்கமற்ற அரக்ககுணம் கொண்டோர், மாணவச் செல்வங்களைத் தாக்கிய இடம் மக்களின் சொத்து, அரசின் சொத்து. யூனியன் கல்லூரிச் சொத்து.

இயேசு பிரானின் அறச் செய்தியை மீறி அடாத்தாகப் போர்த்துக்கேயர் அருள்மிகு அம்மன் கோயிலை இடித்தது போன்ற வரலாற்றுத் தவறை, அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் ACU 09.04.2021 காலை செய்தனர்.

நிலத்தின் உரிமையில் முரண் வரின் குடியியல் நீதி மன்றத்தை நாடுவதே நாகரீகம், சைவத் தமிழ் நாகரீகம்.

1.    மூன்றாம்பிட்டியில் கோயில் வீதியை நான்கரை ஆண்டுகளாக அடைத்த கிறித்தவ பாதிரியார்,

2.    திருக்கேதீச்சர வளைவை உடைத்ததாகக் குற்ற உசாவலில் உள்ள கிறித்தவ பாதிரியார்,

3.    முசலி, புதுக்குடியிருப்புச் சைவர்களைத் தாக்கக் கம்புகளுடன் கும்பலாகச் சென்ற பாதிரியார்,

4.    வலம்புரி நாளிதழைத் தாக்க முயன்ற கும்பலின் மூளையான கிறித்தவர்,

5.    கேரதீவில் அரச காணியை ஆயரின் காணி என அடாத்தாகப் பெயர்ப்பலகை அமைத்த யாழ்ப்பாணக் கிறித்தவ ஆயர்,

இத்தகைய எண்ணற்ற அடக்குமுறைகள், அட்டூழியங்கள், அடாத்துகள் யாவும்:

அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால், 400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போர்த்துக்கேயரின் வன்முறை, வரலாறாகாமல் வாழ்வியலாகத் தொடர்கிறது, தீவிரவாதக் கிறித்தவர்களிடையே.

தெல்லிப்பளையில் அப்பாவி மாணவர்களைத் தாக்குவதற்குப் பதிலாக, வன்முறை வெறியே வாழ்வியலாக் கொண்டோர் அதிபரைஅல்லவா தாக்கியிருக்க வேண்டும். அவரது அறிவுரையோடு ஈருருளிகளை நிறுத்திய மாணவரைத் தாக்குவது, எய்தவன் இருக்க அம்பை நோகும் பேடித்தனம், கோழைத்தனம்.

பாணந்துறையில் உரிமைக் கோயில் ஐயரை எரித்த நிகழ்ச்சியே பதிலடி கொடுக்கும் மனப்பாங்கைத் தன் பிஞ்சு உள்ளத்தில் உருவாக்கியதாகப் பிரபாகரன் கூறியதை எவரும் மறக்கக் கூடாது.

அடியும் உதையும் பிஞ்சு உள்ளங்களில் எதிர்வினை உணர்வை உண்டாக்கும் என நாகரீகத்தைப் போதிக்க வந்த, கொல்லன் தெருவில் மொட்டை ஊசி விற்க வந்த, அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அறிவுக்கு எட்டவில்லையா?

இலங்கைச் சைவர்களாகிய நாங்கள், இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழு முன் முறையிடுவோம். தீவிரவாதக் கிறித்தவரைத் தண்டிக்கும் நிலை வராவிட்டால், ஐநா மனித உரிமை ஆணையம் வரை எடுத்துச் செல்வோம்.

அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACM) தம் உறுப்பினர்களின் பொதுச் சபையைக் கூட்டி,

1.    இயேசு பிரானின் கொள்கைளுக்கு எதிரான தீவிரவாதக் கிறித்தவர்களை அமைப்பில் இருந்து நீக்காவிட்டால்,

2.     அமைப்பின் உயர் பதவிகளில் இருப்போர், ஆயர் நிலயில், குருமுதல்வர் நிலையில் உள்ளோர், இயேசு பிரானிடமும் மாணவர்களிடமும் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோராவிட்டால்,

3.    அமைப்பின் உயர் பதவிகளில் இருப்போர், தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகாவிட்டால்,

அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அமைப்பை, வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பாகக் கருதித் தடைசெய்யுமாறு இலங்கை அரசை வேண்டுகிறேன்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை)

இதையும் படிங்க

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள்!

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாக!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே...

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள்!

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாக!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே...

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதலில் 55 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திரிபடைந்த கொரோனா வைரஸ் உள்நுழைவதைக் கட்டுப்படுத்த சிறந்த சுகாதார நடவடிக்கை தேவை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை  உள்ளடக்கியதாக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன் அதில் கையெழுத்திடுமாறு பொதுமக்களைக்...

சீன ரொக்கெட்டின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் மிகப்பெரிய ராக்கெட்டின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன. ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி...

மேலும் பதிவுகள்

3 ஆவது முறையாக முதல்வரானார் மம்தா

இந்தியாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்  தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 66...

ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு

கடந்த 48 மணி நேரத்தில் வீரர்கள் மற்றும் ஊழியர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2021 ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்கவுள்ளதாக...

ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்த சி.எஸ்.கே வீரரை பத்தே நிமிடத்தில் காத்த சோனுசூட்

சிஎஸ்கே வீரர் ஒருவர் தனது உறவினருக்காக ஆக்சிஜன் கேட்டு வந்த நிலையில், நடிகர் சோனு சூட் பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா...

சுவையும் சத்தும் கொண்ட ராகி நூடுல்ஸ்!

தேவையானவைராகி நூடுல்ஸ் - 2 கப்வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)வெங்காயத்தாள் -...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு அவல் கொழுக்கட்டை

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு அவல் கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.கேழ்வரகு அவல் கொழுக்கட்டைதேவையான பொருட்கள்...

தமிழீழ இனப் படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலையின் 12 ஆவது நினைவேந்தலை முன்னெடுக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை,

பிந்திய செய்திகள்

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள்!

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாக!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே...

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு