செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி – வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம்!

கிளிநொச்சி – வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம்!

0 minutes read

அக்கராயன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து இராணுவத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினர் மூலம் அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.