யாழில் சீரற்ற காலநிலை- 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு!

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சூரியராஜ் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்றுமுன்தினம் முதல் பெய்த மழை மற்றும் அதிக காற்று காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக வியாவில் பயிற்சி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு, சேத விபரங்கள் தொடர்பில் கள ஆய்வில் ஈடுபட்டனர்

ஆசிரியர்