கண்டியில் விபத்து- நீரில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்!

கண்டி- இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போயுள்ள மற்றைய நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் காரின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்