இன்று (வெள்ளிக்கிழமை)குறித்த சந்திப்பில் , யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர் . குறித்த சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக யாழ் . மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் கொரோனா இடர்காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் .
மேலும் , விவசாய நடவடிக்கைகளில் சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகள் , வீதி அபிவிருத்தி , நகர சுத்தப்படுத்தல்கள் , மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன .
அத்துடன், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .