Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உணவு வீக்கம் 47 வீதத்தால் அதிகரிப்பு | மக்கள் எவ்வாறு உயிர் வாழ்வது – ஹர்ஷ டி சில்வா கேள்வி

உணவு வீக்கம் 47 வீதத்தால் அதிகரிப்பு | மக்கள் எவ்வாறு உயிர் வாழ்வது – ஹர்ஷ டி சில்வா கேள்வி

2 minutes read

சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் 7500 ரூபா வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது. நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சமுர்த்தி கொடுப்பனவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

உணவு வீக்கம் 47 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் எவ்வாறு உயிர்வாழ்வது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (4) சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முன்னேற்றகரம் குறித்து நிதியமைச்சர் ஆற்றிய விசேட உரையின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தமை காலதாமதப்படுத்தியமை, ரூபாவை தளம்பல் நிலைக்கு நிலைப்படுத்தியமை,வரிக்குறைப்பு செய்தமை வரலாற்று ரீதியிலான தவறு என நிதியமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

இதனை நாங்கள் 2021ஆம் ஆண்ட வரவு செலவு திட்டத்தின் வேளையில் இருந்து குறிப்பிட்டு வருகிறோம்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்ட்ட போது ‘தவறான பொருளாதார பயணம்’என பிரதமரிடம் குறிப்பிட்டேன்,எமது கருத்தை பிரதமர்கூட கவனத்திற்கொள்ளவில்லை.

பொருளாதார முன்னேற்ற கருத்துக்களுக்கு பிரதமர் மதிப்பளித்திருந்தால் நாடு தற்போது வங்குரோத்து நிலைமையினை அடைந்திருக்காது.

எமது ஆட்சி காலத்தில் அரசமுறை கடன் நிலைப்பேறான தன்மையில் இருந்தது. தற்போதைய அரசாங்கத்தில் தான் அரசமுறை கடன் நிலைபேறான தன்மையை இழந்துள்ளது.

நாட்டின்மொத்த தேசிய உற்பத்தி ஆரம்ப காலத்திலிருந்து குறைவடைந்துள்ளது என நிதியமைச்சர் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஆட்சிபொறுப்பை ஏற்கும் போது மொத்த தேசிய உற்பத்தி 9 சதவீதமாக காணப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை கையளிக்கும் போது 9 சதவீதம் 12.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் 7500 கொடுப்பனவு வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலலும் தவறானது. நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அதிக வருமானம் பெறும் தரப்பினரே அரச நிவாரணங்களை அதிகளவில் பெற்றுக்கொள்கிறார்கள்.

சமுர்த்தி கொடுப்பனவு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.உலக வங்கியின் அறிக்கைக்கமைய நாட்டில் நிவாரம் கிடைக்கப்பெற வேண்டிய 60 சதவீதமானவர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது,

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய வங்கியின் முன்னாள் ,ஆளுநர் பதவி விலகியுள்ளதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூறும் தரப்பினர் இன்று எவருமில்லை.தவறான தீர்மானங்களினால் பண வீக்கம் நாளாந்தம் உயர்வடைகிறது.

உணவு வீக்கம் 47சதவீதததினால் உயர்வடைந்துள்ள நிலையில் மக்கள் எவ்வாறு உயிர்வாழ்வது.

இலவச அம்பியூலன்ஷ் சேவையான 1990 சுவசெரிய சேவையை முன்னெடுத்து செல்வதற்கு நிதி ஒதுக்கீட்டை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரமரிடம் விசேட கோரிக்கையை முன்வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More