0
அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஏதுவாக, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் நாளை (26) முதல் சேவைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.