Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மகிந்த கோட்ட உறவில் விரிசல் | தப்பியோடும் எண்ணம் மகிந்தவிற்கு இல்லை

மகிந்த கோட்ட உறவில் விரிசல் | தப்பியோடும் எண்ணம் மகிந்தவிற்கு இல்லை

3 minutes read

இலங்கையில் ராஜபக்ச வம்சாவளியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்த நபருக்கு இலங்கையிலிருந்து தப்பியோடும் நோக்கம் எதுவுமில்லை என முன்னைய அதிகாரமிக்க நபரின் பிரதான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் ஆயிரக்கணக்கானவர்கள் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து புதன்கிழமை மாலைதீவிற்கு தப்பிச்சென்றார்.

இன்று சவுதி அரேபிய விமானத்தில் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.இன்னொரு சகோதரர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நெருக்கடி தீவிரமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆனால் முன்னாள் பிரதமர் ஜனாதிபதியான 76வயது மகிந்த ராஜபக்சவிற்கு அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை என அவரது முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

1948ம் ஆண்டின் பின்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார வீழ்;ச்சியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறும் எண்ணமில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளார்.இந்த நெருக்கடிகளிற்கு பெருமளவிற்கு ராஜபக்சாக்களின் இரண்டு தசாப்தகால ஆட்சியே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவரும் தங்களிற்கு இலங்கையிலிருந்து வெளியேறும் எண்ணமில்லை என தெளிவாக தெரிவித்துவிட்டனர் ஆனால் மகிந்த ராஜபக்ச தற்போதைய நிலவரம் குறித்து கவலையடைந்துள்ளார் என தன்னை பெயர் குறிப்பிடவிரும்பாத அவரின் பிரதான அதிகாரி அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

1970 இல் அரசியலில் நுழைந்த மகிந்த 2005 இல் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி;ங்கவுடன் கடும் போட்டியிட்டு இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்,.

மகிந்தவின் ஜனாதிபதி பதவிக்காலம் கோத்தபாய ராஜபக்ச உட்பட அவரது சகோதரர்கள் பலர் முக்கிய பதவிகளை வகிப்பதற்கு காரணமாக அமைந்தது.

தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் பாதுகாப்பபு செயலாளரான கோத்தபாயவுடன் இணைந்து வடக்கின் தமிழ்கிளர்ச்சியாளர்களை ஈவிரக்கமற்ற விதத்தில் மகிந்த அடக்கினார்.இந்த உள்நாட்டு யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

யுத்தத்தின் இறுதிதருணத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பாரிய யுத்த கால மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.நீதிக்குபுறம்பான படுகொலைகள் ஏனைய திட்டமிட்ட துஸ்பிரயோகங்கள் உட்பட.

பௌத்தர்கள் பெரும்பான்மையினத்தவர்களாக வாழும் 22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் பலர் ஈவிரக்கமற்ற விதத்தில் உள்நாட்டு போரை தோற்கடித்தமைக்காக மகிந்தவை பெரும் வீரர் என பாராட்டினார்.

தனது மக்கள் ஆதரவின் உச்சத்தில் ராஜபக்ச குடும்பம் அரச குடும்பம் என கொண்டாடப்பட்டது,சிரேஸ்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் உட்பட பலர் அவர்கள் முன் மண்டியிட்டனர்.

2019 இல் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற பின்னர் கோத்தபாய ராஜபக்ச புதிய ராஜபக்ச நிர்வாகத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.

ஆனால் இலங்கையின் வலுவான வம்சாவளியின் தலைவிதியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த வருட ஆரம்பத்தில் தீவிரமடையும். பொருளாதார நெருக்கடி ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகநிர்ப்பந்திக்கப்பட்டார்.

அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்சாக்களின் மாளிகையின் சுவர்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும்அ ஓவியங்களை வரைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது தந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை சேதப்படுத்தினர்.

சகோதரர்கள் மத்தியில் பிளவா?

மகிந்த ராஜபக்சவின் பிரதம உதவியாளர் மகிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் பிளவு நிலவுகின்றது என்பதை உறுதி செய்துள்ளார்.

மகிந்த காரணமாகவே கோத்தபாய பதவிக்கு வந்தார் பதவிக்கு வந்ததும் கோத்தபாய மகிந்தவை புறக்கணித்துவிட்டார் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

இறுதிநிமிடம் வரை எவ்வாறு ஆட்சிசெய்வது என்பது தெரியாத நிலையில் கோத்தபாய ராஜபக்ச காணப்பட்டார்,ஆனால் அவர் ஒருபோதும் மகிந்தவின் சொல்லை கேட்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சமூக ஊடக தளமொன்றில் கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்வீரதுங்க பல முடிவுகளை எடுத்தவேளை ஜனாதிபதி மகிந்தவுடன் கலந்தாலோசிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

கோத்தபாயவை இராணுவசிந்தனையுடைய நபர் அவரால் அனைத்து விடயங்களையும் இராணுவரீதியில் புரிந்துகொள்ள மாத்திரம் முடியும் என உதயங்கவீரதுங்க தெரிவித்திருந்தார்.

2019 தேர்தலில் கோத்தபாயவை நிறுத்துவது குறித்து மகிந்த தயக்கம் கொண்டிருந்தார் என இலங்கை ஊடகங்கள் தெரிவித்திருந்தன,அதனை மகிந்தவின் பிரதான உதவியாளர் உறுதி செய்தார்.

கோத்தபாய ராஜபக்சவி;ன் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட அழுத்தகுழுவானவியத்மகவின் அழுத்தம் காரணமாகவே மகிந்த அவரை நியமிக்க இணங்கினார்.

அடுத்த தலைவராக்குவதற்கும் குடும்பத்தின் பாரம்பரியத்தினை கொண்டு செல்வதற்கும் நாமலை மகிந்தராஜபக்ச வளர்க்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கி;ன்றன.

கோட்டபாய நாட்டை அழித்துள்ளதுடன் நாமலின் எதிர்காலத்தையும் ராஜபக்ச குடும்பத்தின் முன் பாரம்பரியத்தையும் அழித்துவிட்டார் தாமதமாக என்றாலும் கோத்தபாய தனது பாடத்தினை கற்றுக்கொண்டிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More