May 31, 2023 6:03 pm

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! – ரணில் முன்னிலையில் தமிழ்த் தரப்பு சீற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட எந்த எந்தவொரு விடயமும் நிறைவேற்றவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தான் தெரிவித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

”இதற்கு முன்பு நடைபெற்ற 4 கூட்டங்களிலும் சொன்னதையே ஜனாதிபதி இன்றும் கூறுகின்றார். எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சுதந்திர தினத்துக்கு முன்பு எல்லாம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. எதுவும் இடம்பெறவில்லை என்பதுதான் திடமான உண்மை என்பதை இங்கே பதிவு செய்கின்றேன் என்று நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தேன்” – என்று சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து கொழும்பு அரசால் திரும்பப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மாகாணத்திடம் கையளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

அதனை ஓர் அறிக்கையாகவும் தயாரித்து எடுத்து வந்திருந்த விக்னேஸ்வரன், அதனை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்