December 4, 2023 6:48 am

கிளிநொச்சியில் சுமார் 500 வீரர்கள் பங்குபற்றிய எடின்பரோ மரதன் ஓட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இன்று கிளி பீப்பிள் மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ துறை பழைய மாணவர் சங்கம் – லண்டன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து எடின்புரோ மரதன் நிகழ்வுக்காக பிரித்தானியாவில் இணைந்து பங்குகொள்கிறார்கள்.

அதனை வலுப்படுத்தவும் அதற்கு ஆதரவாகவும் இன்று பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்கா வரை அடையாள மரதன் நிகழ்வு பல நூற்றுக்கணக்கானவர்களின் பங்குபற்றலோடு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் அவர்கள் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார். இதில் சுமார் 520 வீரர்கள் பங்கெடுத்ததுடன் சுமார் 80 முக்கியஸ்தர்கள் ஆதரவு தெரிவித்து பங்குபற்றியிருந்தனர்.

வடக்கு கிழக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழித்து வலுவான இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் பிரித்தானியாவின் எடின்பரோ மரதன் ஓட்டப் போட்டிக்கு தாயகத்தில் இருந்து வழங்கிய பேராதரவு நிகழ்வு இதுவாகும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்