December 2, 2023 9:33 pm

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ‘மொட்டு’ தயார்! – மஹிந்த கூறுகின்றார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

‘இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் வினவிய போது,

“ஜனாதிபதியின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. அவரின் கருத்துக்கு என்னால் பதில் வழங்க முடியாது. ஆனால், எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது. மக்கள் ஆணை மீண்டும் எமது கட்சிக்கே கிடைக்கும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்