September 22, 2023 5:27 am

சிறையால் விடுதலையான நபர் ஹெரோய்ன் பாவனையால் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் உடலில் ஏற்றியவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த நபர் கடந்த 3 ஆண்டுகளாக உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே ஓராண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த நிலையில் விடுதலையாகியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள ஆள்கள் அற்ற வீட்டிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது சடலத்துக்கு அருகில் உயிர்கொல்லி ஹெரோய்ன் ஊசி மூலமாக அரைவாசி ஏற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தாமலிருந்து மீண்டும் அதனைப் பயன்படுத்தியதால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் முன்னெடுத்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்