December 2, 2023 11:37 am

ரணிலைக் களமிறக்க இதுவரை முடிவில்லை! – மஹிந்த தெரிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பயனற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெரமுனவின் நிலைப்பாடாக சிலர் வெளியில் தெரிவிக்கும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று அமைச்சர்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரமுனவின் நிலைப்பாடு அல்ல.

பெரமுனவின் தலைவரான என்னால் வெளியிடப்படாத கருத்துக்களைக் கட்சியின் கருத்து என்றோ அல்லது எனது கருத்து என்றோ எவரும் கொள்ளவேண்டாம்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்