பசறையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பசறை, 13 ஆம் கட்டை – லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 71 வயதான நபரே உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில், பதுளை நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.