செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் மக்கள் மீது பொலிஸாரும் அடாவடித்தனம்!

முல்லைத்தீவில் மக்கள் மீது பொலிஸாரும் அடாவடித்தனம்!

1 minutes read

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையில், அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி. ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்வரும் 16ஆம் சனிக்கிழமை ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் ரவிகரன் எம்.பியால் இதன்போது ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட மக்கள் மீது பொய்க் குற்றங்களைப் பதிவு செய்வது, மக்கள் மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மக்களால் ரவிகரன் எம்.பியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.