செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா? | இதயச்சந்திரன்

அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா? | இதயச்சந்திரன்

1 minutes read

சீனாவின் இராட்சத விமானங்கள் ஈரானிற்குள் எதைக் கொண்டு வந்தது? அங்கிருந்து எதனைக் கொண்டு சென்றது?.

வந்தது, கப்பல் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள். சென்றது, செறிவூட்டப்பட்ட யுரேனிய அணுசக்தி உபகரணங்கள் என்கிற சந்தேகம் பலமாக எழுகிறது.

உண்மையில் ஈரானின் அணு ஆயுத நிலைகளை அமெரிக்காவின் B2 விமானங்கள் தாக்கியதா?. இது குறித்த பல முரண்பட்ட செய்திகள் வருகின்றன.

மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள ஈரானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, உலகின் மசகு எண்ணெய் ஆதிக்கத்தை முழுமையாகக் கைப்பற்றும் அமெரிக்க திட்டத்தின் ஒரு பகுதிதானா இந்த இஸ்ரேல் ஆரம்பித்த போர்?.

தனது பொருளாதாரப் போட்டியாளர் சீனாவின் எரிசக்தி வழங்கல் மையங்களையும் அதன் பாதைகளையும் தன்வசமாக்குவதே அமெரிக்காவின் மூலோபாய இலக்கு.

இருப்பினும் டிரம்பின் வரிப்போர், மத்திய கிழக்குப் போர், பைடனின் உக்ரெயின் போர் எல்லாமே தோல்விதான்.
ஆகவே மேலதிக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேறு வழிகளையே அமெரிக்கா நாட வேண்டும்.

வர்த்தகப் போரில் புதிய பரிமாணத்தை சீனா ஆரம்பித்துள்ளது.
அதாவது ஆபிரிக்க நாடுகளுடன் வரியில்லா (Tariff) வர்த்தகத்தைச் செய்ய சீனா உடன்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா வரியில்லா வர்த்தகம் செய்யுமா?. என்கிற கேள்வி எழுகிறது.

ஆசியான் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இதே போன்ற வரியற்ற வர்த்தகத்தை சீனா மேற்கொண்டால் அமெரிக்காவின் நிலை என்னாகும்?.
ஆயுதப் போர் தணிந்து, வேறு வடிவிலான பொருளாதாரப் போரினை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும்.
பார்ப்போம்,…

-இதயச்சந்திரன்
(24-6-2025)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More