செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டி.என்.ஏ (DNA) | திரை விமர்சனம்

டி.என்.ஏ (DNA) | திரை விமர்சனம்

1 minutes read

அதர்வா முரளி நடித்திருக்கும் திரைப்படம் என்பதாலும், அவருடைய கதை தெரிவு அழுத்தமானதாகவும் , வித்தியாசமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையினாலும், அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும்’ DNA’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட தமிழ் படத்தைக் காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு …அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

காதலில் தோல்வியடைந்து காதலியை மறக்க இயலாமல் ஆண்டு கணக்கில் மது அருந்தி குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும் நபரான ஆனந்( அதர்வா) திற்கும், நடத்தையில் சமச்சீரற்ற தன்மை கொண்ட பலவீனமான உளவியல் திறனை கொண்ட திவ்யா( நிமிஷா சஜயன்) விற்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது.

ஆனந்த் – திவ்யா என இரு தரப்பு பெற்றோர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இவர்களின் இல்லறம் தொடங்குகிறது. இதன் முத்தாய்ப்பாக இவர்களுக்கு பிள்ளை ஒன்றும் பிறக்கிறது.

வைத்திய சாலையில் பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பால் ஊட்ட சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு தாயிடம் தாதியர் வழங்க, பிள்ளையை கையில் ஏந்தும் திவ்யா, என் குழந்தை எங்க? இது எம்முடைய குழந்த இல்ல..! என்று சொன்னதும் அதிர்ச்சி கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும். (ஒரு நல்ல கதை உள்ள படத்திற்கு தான் வருகை தந்திருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.)

ஆனந்த்- திவ்யா தம்பதியினருக்கு பிறந்த பிள்ளை எங்கே? தற்போது திவ்யாவிடம் இவர்களின் பிள்ளை என வழங்கப்பட்டிருக்கும் குழந்தை யார் ? இதன் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

பச்சிளங்குழந்தைகள் கடத்தல் எனும் நுட்பமான குற்ற சம்பவத்தை மையப்படுத்தியும், தாய்க்கும், சேய்க்கும் இடையேயான தொப்புள் கொடி உறவின் ஒரு நிமிட ஸ்பரிசம் – பந்தம் குறித்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா ஒவ்வொரு கடினமான சூழல்களிலும் அதை நேர்த்தியான உணர்வு வெளிப்பாட்டின் மூலம் எதிர்கொண்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். அவரது கதாபாத்திர தெரிவு அற்புதம் என சொல்ல வைக்கிறது.

திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் தன் பங்கிற்கு நன்றாக நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

இவர்கள் இருவரையும் கடந்து பணியிலிருந்து விரைவில் ஓய்வு பெறும் காவலராக அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் நடிகர் பாலாஜி சக்திவேல்.

விறுவிறுப்பான கதைக்கு ஒளிப்பதிவும் , பின்னணியிசையும் மிகப் பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும் வெகு ஜன ரசிகர்களுக்கு சோர்வு தராமல் அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் உச்சகட்ட காட்சியில் தாயையும், பிள்ளையையும் ஒன்று சேர்க்க இயற்கையுடன் கூடிய ஆன்மீக உணர்வை கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

DNA என்றால் வைத்திய ரீதியாக மரபணு பரிசோதனை என்பதால்.. அதனையும் இயக்குநர் கதையில் பொருத்தமாக இணைத்திருப்பதையும் ரசிக்கலாம்.

DNA – குறைபாடுடைய மரபணு.

தயாரிப்பு : ஒலிம்பியா மூவிஸ்

நடிகர்கள் : அதர்வா முரளி, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி , ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், சேத்தன் மற்றும் பலர்.

இயக்கம் : நெல்சன் வெங்கடேசன்

மதிப்பீடு : 2.5/5

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More