18
தேவையான பொருள்கள்
பழுத்த வாழைப்பழம், கேரட்-தலா 1
பேரீச்சம்பழம் – 4
காய்ச்சி, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்த பால் – 1 கிண்ணம்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
செய்முறை
பெரிய மிக்ஸி ஜாரில், கேரட் துருவல்,சிறிய துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், விதைகள் நீக்கிய பேரீச்சம்பழம், அரை கிண்ணம் பால் சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து, ஒருமுறை அரைத்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும்.