செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமராட்சி கிழக்கில் 30 கிலோ கேரள கஞ்சா மீட்பு! – இருவர் கைது

வடமராட்சி கிழக்கில் 30 கிலோ கேரள கஞ்சா மீட்பு! – இருவர் கைது

1 minutes read
வவுனியா பொலிஸாரால் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின்போது 30 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வுப்  பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் இன்று அதிகாலை திடீர் சோதனை நடவடிக்கையை மருதங்கேணி பகுதியில் முன்னெடுத்தனர்.

இதன்போது, போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த  36, 35 ஆகிய வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து  30 கிலோ  500 கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா ஆகியவை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.