March 31, 2023 6:52 am

கொரோனாவின் பின் அதிகரித்துள்ள இதய நோயாளர்களின் எண்ணிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொரோனா வந்த காலத்தில் இருந்து அமெரிக்காவில் மாரடைப்பால் இறப்பவர்களின் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு, இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது.

இது, 6.2 சதவீதம் அதிகம். அதற்கு முன்பு, 2003-ம் ஆண்டுதான் அதிகம் பேர் இதய நோயால் உயிரிழந்து இருந்தனர். 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு இறந்தவர்கள் எண்ணிக்கை, அதை தாண்டிவிட்டது.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்கள், கொரோனா காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்